Home » » பகல் வேளைகளிலும் மோட்டார் சைக்கிளின் பிரதான விளக்கை ஒளிரச் செய்தல் கட்டாயம்

பகல் வேளைகளிலும் மோட்டார் சைக்கிளின் பிரதான விளக்கை ஒளிரச் செய்தல் கட்டாயம்

Written By Unknown on Sunday, April 13, 2014 | 9:57 PM

நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோர் பகல் வேளைகளில் தமது வண்டியின் பிரதான ஒளி விளக்கினை ஒளிரச் செய்ய வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
மேல் மாகாணத்தில் நண்பகல் வேளையில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான ஒளி விளக்கினை (ஹெட் லைட்) ஒளிரச் செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டமை மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கு நண்பகலிலும் மோட்டார் சைக்கிளின் பிரதான ஒளி விளக்கினை ஒளிரச் செய்தமை முக்கிய பங்கு வகிப்பதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு உறுதியாக நம்புகிறது.
Share this article :

Post a Comment