Home »
சர்வதேச செய்திகள்
» சாலமன் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது
சாலமன் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது
Written By Unknown on Monday, April 14, 2014 | 9:05 PM
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே சாலமன் தீவுகள் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் இடிந்தன. இச்சம்பவத்தில் 20–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று சாலமன் தீவுகள் அருகே மகீரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து சாலமன் தீவுகள், பப்புவா நியூசினியா, வனாதுபிஜி, ஆஸ்திரேலியா, இந்தோனேதியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச் சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று சாலமன் தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
அங்கு 7.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது.
தொடக்கத்தில் வாபஸ் பெறப்பட்ட நிலையில் பசிபிக் மையம் மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சிறிது நேரத்தில் சிறிய சுனாமி அலைகள் தாக்கின.
அதில் தலைநகர் ஹோனியராவுக்கு தென்கிழக்கில் சில சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சாலமன் தீவுகள் பூகம்பம் மற்றும் எரிமலை அபாய பிராந்தியத்தில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இங்கு சாந்தா குரூஸ் தீவுகள் அருகே நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர்.
Labels:
சர்வதேச செய்திகள்
Post a Comment