Home » » இந்த பிர்அவ்ன்களின் கொடுமையை ஒரு மூஸா வந்து முடித்து வைப்பார்- அர்தூகான்

இந்த பிர்அவ்ன்களின் கொடுமையை ஒரு மூஸா வந்து முடித்து வைப்பார்- அர்தூகான்

Written By Unknown on Saturday, August 17, 2013 | 3:17 AM


எகிப்தில் நடந்து வரும் மனிதப் படுகொலையை துருக்கியப் பிரதமர் அர்தூகான் வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலைத்தேய அரசாங்கங்களையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:

எகிப்தில் நடைபெற்று வரும் படுகொலையால் யாரும் பாதிக்கப்படாமல் மௌனமாக இருக்கிறார்களோ, அவர்கள் மிகப் பெரும் துரோகிகளாவர்.ஜனநாயகத்தின் மீதும் வாக்குரிமையின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களை சதிப் புரட்சி மூலம் இராணுவம் கொன்று குவித்துள்ளது.

எகிப்தில் என்ன நடந்தது என்பதை -அது இராணுவப் புரட்சிதான் என்பதை- மேலைத்தேய சக்திகள் பகிரங்கமாகக் கூற மறுக்கின்றன. ஆனால், மூடிய அறைகளுக்குப் பின்னால் இருந்து கொண்டு அதை தனிப்பட்ட முறையில் ஒத்துக் கொள்கின்றனர்.

இராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் வன்முறையைக் கையாளவோ, ஆயுதங்களைப் பயன்படுத்தவோ இல்லை. எகிப்திய மக்கள் விரைவிலோ அல்லது தாமதித்தோ தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவே செய்வர். ஒரு நாள் வரும் அப்போது ஒரு மூஸா வருவார். அவர் இந்தப் பிர்அவ்ன்களின் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வருவார்.

இஸ்லாமிய உலகத்திற்கு எதிராக கடுமையான சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் துருக்கியும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆதலால், பலமான துருக்கியை எதிரிகள் விரும்புவதில்லை. ஆனால்,நமக்கு ஒரு பலமான துருக்கி தேவை. எமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புவோம்.

எகிப்தில் இலக்கு வைக்கப்பட்டிருப்பது ஜனநாயம் மட்டுமல்ல, மனிதாபிமானமும்தான். இராணுவமும் படைவீரர்களும் பொலிஸாரும் தமது சொந்த மக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்களைத் திருப்பியுள்ளனர். அவர்களைக் கொன்று குவிக்கின்றனர். அங்கு நிகழும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இனிமேலும் உள்நாட்டு விடயமாகக் கருத முடியாது.

ஜனநாயகத்தில் மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இந்த சதிப் புரட்சி மழுங்கடித்து விடாது. மறுதலையாக அந்த உணர்வுகள் பலப்பட்டுள்ளன. மாதக் கணக்கில் நீளும் எகிப்து மக்களின் எதிர்ப்பு மனநிறைவுடன் பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
Share this article :

Post a Comment