பிரேஷில் நாட்டைச் சேர்ந்த இயந்திரவியலாளர் ஒருவர் மின்சாரமின்றி சூரியனைப் பயன்படுத்தி மின்விளக்குகளைப் போன்று பிளாஸ்டிக் போத்தல்களின் மூலம் வீட்டுக்கு ஒளயூட்டும் முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அல்பிரடோ மொஸர் என்பவரே ஒளியூட்டும் பிளாஸ்டிக் போத்தல்கைள உருவாக்கியுள்ளார். இவர் 2002ஆம் ஆண்டிலிருந்து இருட்டு அறைகளுக்கு பகல் வேளைகளில் இவ்வாறு ஒளியூட்டி வருகிறார்.
தற்போது இவது முறை உலகெங்கும் பரவலடைந்து வருகிறது. ஒளித்தெறிப்பு மூலம் ஒளிரும் இவ்வகை பிளாஸ்டிக் போத்தல்கள் இவ்வாண்டின் இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பயன்பாட்டிலிருந்து கழிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை பாசி வளராமல் இருப்பதற்காக சலவை செய்து நீர் நிரப்புவதன் மூலம், தொடர்ந்து நீண்ட காலத்திற்கு ஒளித்தெறிப்பின் மூலமே இவை ஒளிருகின்றன.
இந்த போத்தல்களை கூரையின் மீது துளையிட்டு நீர் புகாதவாறு பொருத்தி பயன்படுத்தலாம் என மொஸர் கூறுகிறார்.
“மின்சாரம் மின்சாரம் இல்லாத வேளைகளில் நான் வசிக்கும் உபரபா நகரில் தொழிற்சாலையில் மாத்திரமே மின்சாரம் இருக்கும். இதனால் எனது முதலாளி பிளாஸ்டிக் போத்தல் யுக்தியை பயன்டுத்த ஆலோசனை வழங்கினார். பின்னர் அவற்றை நான் மேம்படுத்தினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment