Home » » பரீட்சைக்கு முன் மாணவர்களுக்கு ஓய்வு: காலத்துக்குப் பொருத்தமானது

பரீட்சைக்கு முன் மாணவர்களுக்கு ஓய்வு: காலத்துக்குப் பொருத்தமானது

Written By Unknown on Saturday, August 17, 2013 | 3:11 AM


பரீட்சைக்கு முன்னர் பிள்ளைகளுக்கு சிறிது ஓய்வு வழங்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் காலத்துக்குப் பொருத்தமானதென சிறுவர் நரம்பியல் மருத்துவ நிபுணர் டொக்டர் அநுரத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு ஓய்வுகாலம் என்பது முழுமையாக கல்வி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதென்பது அல்ல. தாம் கற்றவற்றை முகாமைத்துவம் செய்ய சிறந்த பிரவேசமே இங்கு நிகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெற்றோர் பிள்ளைகளை டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பும் அவையில் சிக்கியுள்ளனர்.

பரீட்சைக்கு முன்னைய நாளில் எட்டு அல்லது ஒன்பது மணித்தியாலயம் பிள்ளைகள் உறங்க வேண்டும். பரீட்சைக்காக புதிய உடை அணிதல், பாதணி அணிதல் ஆகியவற்றில் இருந்து தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற ஓய்வு அவசியம்.

பிள்ளைகளுக்கு சுதந்திரமாக நேரமும் இருக்க வேண்டும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் க. பொ. த. சாதாரண/ உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் தினத்திலிருந்து 05 தினங்களுக்கு முன் இருந்து பரீட்சைகள் முடிவும் வரையிலான முழுக் காலத்தில் பரீட்சையில் தோற்றுபவர்களுக்கு துணை வகுப்புக்களை அமைத்தல் விரிவுரை கருத்தரங்கு செயலமர்வு, மாதிரி வினாபத்திரம் அச்சிட்டு விநியோகித்தல் போன்றவை வர்தமானி மூலம் தடுக்கப்பட்டுள்ளன என்றும் டொக்டர் பாதெனிய தெரிவித்தார்.

08 – 09 மணித்தியாலயங்கள் உறங்கிய பிள்ளைகள் அதற்கும் குறைந்த நேரம் உறங்கிய பிள்ளைகளை விட சிறந்த பரீட்சை பெறுபேறுகளை பெற்றதாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் டொக்டர் சுரேஷ் கொட்டகல தெரிவித்துள்ளதாகவும் டொக்டர் பாதெனிய தெரிவித்தார்.
Share this article :

Post a Comment