இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 2,240 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 7,566 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்காக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்திருந்தனர். நேர்முகப் பரீட்சையின் பின்னர் ஹஜ் கடமை நிறைவேற்றத் தகுதி பெற்றவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திணைக் களத்தின் அனுமதிக் கடிதம் அனுப்பப் பட்டவர்களுக்கு மட்டுமே இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முகவர் நிலையங்களில் தம்பை பதிவு செய்தவர்களும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக கூறி சிலர் பணம் பெறுவதாக தகவல் கிடைத்துள் ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விடயத்தில் கலாசாரத் திணைக்களமும் சவூதி அரேபிய அரசும் உறுதியாக உள்ளதாகவும் யாரிடமும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எம். எஸ். பாஹிம்(thinakaran)
Post a Comment