Home » » புல­மைப்­ப­ரிசில் பரீட்சை முடி­வுகள் ஒக்­டோ­ப­ரில்

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை முடி­வுகள் ஒக்­டோ­ப­ரில்

Written By Unknown on Monday, August 26, 2013 | 7:21 PM


ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எதுவிதமான முறைப்பாடுகளும் தமக்குக் கிடைக்கவில்லையெனவும் குறித்த பரீட்சையானது வெற்றிகரமாக நடை­பெற்­ற­தா­கவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம் முறை ஐந்தாம் தரபுலமைப் பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் மூன்று இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்­பி­டத்­தக்­க­து.
Share this article :

Post a Comment