Home »
சர்வதேச செய்திகள்
» பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்
பூமியை நோக்கி வரும் சூரியப் புயல்
Written By Unknown on Wednesday, August 21, 2013 | 8:21 PM
சூரியனில் இருந்து நேற்று அதிகாலை வெளிப்பட்ட "சூரியப் புயல்' பூமியை நோக்கி வருகிறது எனவும், இதனால் பூமிக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும்; தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூரியப்புயல் நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒரு நிகழ்வுதான். சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படும். சூரிய காந்தப் புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.
Labels:
சர்வதேச செய்திகள்
Post a Comment