Home »
இலங்கை செய்திகள்
» ஹஜ் கட்டண விடயத்தில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
ஹஜ் கட்டண விடயத்தில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Written By Unknown on Friday, August 23, 2013 | 1:25 AM
இவ்வருடத்துக்கான ஹஜ் கட்டணம் ஐந்தரை இலட்சம் ரூபாவிலிருந்து 7 இலட்சம் ரூபா வரை சில ஹஜ் முகவர் நிலையங்கள் அறவிட தயாராகியுள்ளன. எனவே இதுவிடயத்தில் விஷேட கவனம் செலுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுமாறு ஜனாதிபதியிடம் செரன்டிப் ஹஜ் உம்ரா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
செரன்டிப் ஹஜ் உம்ரா சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எச். மொஹமட் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
எமது சங்கத்தில் 41 முகவர் நிலையங்கள் அங்கம் வகிக்கின்றன. இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா 2240 பேரையும் நாம் தலா 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறோம். இந்த ஹஜ் பயணிகளை மத்தள விமான நிலையத்திலிருந்து நேராக ஜித்தா விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முடியும். இந்தக் கோட்டா எமக்கு வழங்கப்படுமிடத்து மத்தள விமான நிலையத்துக்கு தாங்கள் வருகை தந்து ஹஜ்ஜாஜிகளை வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
ஹஜ் கட்டண அதிகரிப்பின் காரணமாக ஹஜ் விண்ணப்பதாரிகள் சுமார் 1500 பேர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் தாம் செய்திருந்த பதிவுகளை ரத்துச் செய்துள்ளார்கள்.
இது விடயத்தில் தாங்கள் கவனம் செலுத்தி உரியநடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
இது தொடர்பாக தங்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்று வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
Post a Comment