Home » » அமெரிக்காவினால் அனைத்து போன் அழைப்புகளையும் பதிவு செய்ய முடியும் - ஸ்னோடென்

அமெரிக்காவினால் அனைத்து போன் அழைப்புகளையும் பதிவு செய்ய முடியும் - ஸ்னோடென்

Written By Unknown on Wednesday, March 19, 2014 | 7:28 PM


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியால், ஒரு நாட்டின் அனைத்து போன் அழைப்புகளையும் பதிவு செய்ய முடியும் என ஸ்னோடென் ரகசிய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய கம்ப்யூட்டர் நிபுணர் எட்வர்டு ஸ்னோடென், அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தார்.

 நட்பு நாடுகளையும் உளவு பார்க்கும் பணியில் அமெரிக்கா ஈடுபடுவதை அம்பலப்படுத்தினார். அவரை கைது செய்ய அமெரிக்க முயன்றதால், ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ரகசிய ஆவணத்தில், ‘‘தேசிய பாதுகாப்பு ஏஜென்சியிடம், ஒரு நாட்டின் அனைத்து போன் அழைப்புகளையும் இடைமறித்து அதன் உரையாடல்களை பதிவு செய்யும் கருவி (மிஸ்டிக்)’’ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு தனிநபர் 30 நாட்கள் வரை பேசிய உரையாடல் களை அந்த கருவியில் இருந்து கேட்க முடியும். இந்த மிஸ்டிக் கருவி கடந்த 2011ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகிக்கும் வகையில் புதிய போன் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த போன் உரையாடல்கள் முழுவதையும் மிஸ்டிக் கருவியின் தகவல்களிலிருந்து அமெரிக்க உளவு ஏஜென்சிகள் பெற்றுக் கொள்கின்றன. தற்போது ஒரு நாட்டில் மட்டும் உபயோகத்தில் உள்ள இந்த மிஸ்டிக் கருவியை இன்னும் 6 நாடுகளில் பயன்படுத்தப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் செய்தி தொடர் பாளர் கூறுகையில், ‘‘நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதுதான் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் வேலை. அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டே இந்தப் பணி நடக்கிறது’’ என்றார்.
Share this article :

Post a Comment