Home »
EDUCATIONAL NEWS
» உலக மட்டத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருது அறிமுகம்
உலக மட்டத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருது அறிமுகம்
Written By Unknown on Wednesday, March 19, 2014 | 5:25 AM
உலக மட்டத்தில் கல்விக்கான உயர் விருது ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது தொழிலுக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஒரு ஆசிரியருக்கு பத்து லட்சம் டாலர்கள் பெறுமதியான இந்த விருது வழங்கப்படும்.பத்து வருடங்களுக்கு அதிகமாக இந்தப் பணம் அந்த ஆசிரியருக்கு வழங்கப்படும். ஆனால், அவர் குறைந்தபட்ச 5 ஆண்டுகளுக்காவது ஒரு வகுப்பாசிரியராக இருக்க வேண்டும்.
வார்கே ஜெம்ஸ் அறக்கட்டளையால் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான அநுசரணையை துபாயின் ஆட்சியாளரான ஷேக் மொஹம்மட் பின் ரஸீட் அல் மக்டூம் வழங்குவார்.
இந்த அறக்கட்டளையின் கௌரவத் தலைவரான அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அவர்கள், ‘’ஆசிரிய தொழிலுக்கு திறமைசாலிகளை கவரவும் அவர்களை உயர் ஊக்கத்தில் வைத்திருக்கவும், இப்படியான விருது அவசியம்’’ என்று கூறியுள்ளார்.
Labels:
EDUCATIONAL NEWS
Post a Comment