Home » » ரஷ்யாவுடன் கிரீமியா இணைந்தது.

ரஷ்யாவுடன் கிரீமியா இணைந்தது.

Written By Unknown on Wednesday, March 19, 2014 | 7:46 PM


ரஷ்யாவுடன் கிரீமியா இணைந்ததை அடுத்து, ரஷ்ய - உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. கிரீமியாவை நோக்கி தனது படைகளையும், ராணுவ வாகனங்களையும் உக்ரைன் அரசு அனுப்பியுள்ளது.
அத்துடன், ரஷ்ய எல்லையையொட்டி பதுங்கு குழிகளையும் அமைத்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க மறுத்த அதிபர் விக்டர் யானுகோவிச், எதிர்க்கட்சிகளின் நெருக்குதல் காரணமாக அண்மையில் நாட்டைவிட்டு வெளியேறினார். இந்த சூழ்நிலையில், ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், 97 சதவீதம் பேர் அளித்த ஆதரவை அடுத்து, கிரீமியா, ரஷ்யாவுடன் இணைய முடிவெடுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் அவர் ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ரஷ்யாவின் பிரிக்க முடியாத பகுதி கிரீமியா என்றும், ரஷ்யாவுடன் கிரீமியா இணைவதை தடுத்து நிறுத்த மேலை நாடுகள் பனிப்போரில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கிரீமியா, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் செஞ்சதுக்கத்தில் குழுமிய மாஸ்கோ நகரவாசிகள் பலூன்களையும், தேசியக் கொடியையும் பறக்கவிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இதனிடையே, கிரீமியாவை நோக்கி படைகளையும், ராணுவ வாகனங்களையும் உக்ரைன் அரசு அனுப்பி வருவதால், ரஷ்யா - உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
Share this article :

Post a Comment