காணாமல் போன மலேசிய விமானம் கடலில் மூழ்கியிருக்கலாம், பயணித்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என மலேசிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு காணாமல் போனது.
உலக நாடுகள் பலவும் தேடுதல் வேட்டை நடத்தியும், விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, அவுஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைகோள் படத்தில் விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலில் மிதக்கிறது என தெரிவித்தது.
அத்துடன் பிரான்ஸ், சீனா நாட்டு செயற்கைகோள் படங்களும் இத்தகவலை உறுதிப்படுத்தின.
இந்நிலையில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று கூறுகையில், விமானம் இந்திய பெருங்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும், பயணம் செய்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் அறிவித்தார்.
இதனால் பயணம் செய்த நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வோம் என மலேசிய அரசு மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் இன்று நிருபர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், மலேசியாவில் உள்ள அனைவரும் இந்த கறுப்பு நாளில், இறந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.
இந்த நாள் அளவிட முடியாத அளவிற்கு உணர்ச்சியான நாள் ஆகும், விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கும், விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கப்படும், பலியான குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியா அரசு தரப்பில் கூறுகையில், நாங்கள் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்வோம். அவர்கள் சோகத்தில் இருந்து தேற, தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை மலேசியாவிற்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
ஆதாரங்கள் மற்றும் கிடைத்த தகவலின்படி, விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். விமானம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்து குறித்து இன்னும் 17 நாட்கள் கழித்து இறுதி முடிவுக்கு வரமுடியும். இந்த விமானம் தென் இந்திய கடல் பகுதியில் விமானம் விழுந்துள்ளது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்தில் பலியான சீனர்கள் குடும்பத்தினர் மலேசிய அரசை கடும் வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்துள்ளனர். மலேசிய அரசும், விமான துறையினரும் கொலைகாரர்கள் என விமர்சித்துள்ளனர்.
உறவினர்கள் போராட்டம்
பீஜிங் நகரில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன் குவிந்த மாயமான மலேசிய விமான பயணிகளின் உறவினர்கள் நண்பர்கள், மலேசிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலேசிய அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், பொய்யான தகவல்களைக் கூறி திசைதிருப்பி விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது, மலேசிய அரசே எங்கள் உறவினர்களை திருப்பிக் கொடு என்று கோஷமிட்டவாறு ஊர்வலம் சென்றனர்.
இந்நிலையில் மலேசிய தூதரகத்துக்கு எதிரே பொலிஸார் மனிதச் சுவர் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.
எம்.எச்.370... நாங்கள் நீண்ட நாட்கள் பொறுமையுடன் இருக்க முடியாது, 1.3 பில்லியன் மக்கள் விமானத்தில் சென்றவர்கள் குறித்து அறியக் காத்திருக்கிறார்கள் என்று கோஷமிட்டனர்.
அப்போது பொலிஸாருக்கும் விமான பயணிகளின் உறவினர்களுக்கும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது.
மலேசிய ஏர்லைன்ஸ் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிலர் கோஷமிட்டனர்.

Post a Comment