Home »
சர்வதேச செய்திகள்
» மருத்துவ சாதனை!
மருத்துவ சாதனை!
Written By Unknown on Monday, March 24, 2014 | 8:36 PM
முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகத்தை மீளக்கட்டமைத்து மருத்துவர்கள் சாதனை!
மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் படுகாயமடைந்த நபரொருவருக்கு முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை பயன்டுத்தி உருவாக்கப்பட்ட பாகங்களை பயன்படுத்தி புதிய முகமொன்றை கட்டமைத்து பிரித்தானிய சத்திர சிகிச்சை நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வேல்ஸின் கார்டிப் நகரைச் சேர்ந்த ஸ்டீபன் பவர் என்ற மேற்படி நபர் முப்பரிமாண அச்சிடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முழுமையாக முகம் கட்டமைக்கப்பட்ட உலகின் முதலாவது நபரில் ஒருவராக விளங்குகிறார்.
சுவான்ஸீலுள்ள மொரிஸன் மருத்துவமனையைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர்களே இந்த புரட்சிகர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
அவரது கன்ன எலும்புகளை உடைத்து அகற்றிய பின்னரே அவரது முகம் மீளக் கட்டமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பவர் விபரிக்கையில் மேற்படி அறுவைச் சிகிச்சையானது தனது வாழ்வை மாற்றியுள்ளதாக கூறினார்.
உலகில் முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தை அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் முன்னோடி நாடுகளிலொன்றாக பிரித்தானியா விளங்குகிறது.
2012 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஸ்டீபன் பவரின் (29 வயது) தலைக்கவசம் சேதத்துக்குள்ளாகி அவரது கன்ன எழும்புகள் மேல் தாடை மூக்கு என்பன சேதமடைந்ததுடன் மண்டையோட்டிலும் வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் சுயநினைவு இல்லாமல் பல மாதங்களை அவர் மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது.
இந்நிலையில் அவரது சேதமடைந்த முகத்தை மீளக்கட்டமைக்கும் முகமாக மருத்துவர்கள் சிரி ஊடுகாட்டும் உபகரணத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முப்பரிமாண மாதிரிகள் மூலம் மீளக்கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது வரை ஒரு போதும் தம்மால் பயன்படுத்தப்படாத தொழில் நுட்பமொன்றை பயன்படுத்தும் முயற்சி தமக்கு பெரும் சவால் மிக்கதாக அமைந்ததாக அந்த அறுவைச் சிகிக்சையில் பங்கேற்ற மருத்துவரான அட்றியன் சுகர் தெரிவித்தார்.
தொடர்ந்து மருத்துவர்கள் 8 மணி நேர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு முப்பரிமான தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பாகங்களை பயன்படுத்தி ஸ்டீபன் பவரின் முகத்தை மூளக் கட்டமைத்தனர்.
Labels:
சர்வதேச செய்திகள்
Post a Comment