Home » » கிண்ணியாவில் பிறை தென்பட்டது உண்மை; இன்று வியாழன் நோன்புப் பெருநாள்! - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா

கிண்ணியாவில் பிறை தென்பட்டது உண்மை; இன்று வியாழன் நோன்புப் பெருநாள்! - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா

Written By Unknown on Wednesday, August 7, 2013 | 8:02 PM

images
கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது. சற்று முன்னர் (12.30 AM) கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லாஹ் மௌலவி கிண்ணியா நெட் இற்கு உறுதிப்படுத்தினார்.

கிண்ணியாவில் பிறையை பார்த்ததாக கூரியவர்களுடன் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா, மற்றும் தௌவா அமைப்புக்கள் விசேடமாக நடாத்திய ஒன்றுகூடலின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விஷேட அறிக்கையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே இன்று (8) வியாழக்கிழமை கிண்ணியா முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பு : நாளை உயர்தரப் பரீட்சை நேரசூசிப்படி நடைபெறும்



Share this article :

Post a Comment