இந்தப் பாதை வட கிழக்கு சீனாவிலிருந்து, ரஷியாவின் கிழக்கு சைபீரியா, பெரிங் ஜலசந்தி, அலாஸ்கா, கனடா வழியாக அமெரிக்கா வரை நீளும். இந்த வழித்தடத்தில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 350 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான திட்டமிடலில் சீனா தீவிரமாக உள்ளது. இந்த புல்லட் ரெயில் தடம் அமைத்து விட்டால் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் அதில் புல்லட் ரெயில் செல்லும். வட கிழக்கு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இரண்டு நாளுக்குள் புல்லட் ரெயிலில் போய்ச் சேர்ந்து விடலாம். இந்த ரெயில் திட்டத்துக்கு சீனா-ரஷியா பிளஸ் அமெரிக்கா வழித்தடம் என பெயரிடப்பட்டுள்ளது.
Post a Comment