- நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால், அதன் நீளம் 2400 கிலோமீட்டராக (1500 மைல்) ஆக இருக்கும்.
- ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன. அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.
- மனிதன் தூங்கிக்கொண்டிருக்கும் போது, அவருடைய உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். இதற்கு காரணம், மனிதன் உட்காரும்போது, அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்ப்படும் அழுத்தமாகும்.
- ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.
- மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும், 50,000 லிட்டர் நீராகாரத்தையும் உட்கொள்கிறான்.
- கண்களின் தசையானது ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்க்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
- ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில், அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தை கொடுக்கிறது.
- ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- மனிதனின், ஒரு தனித்த ரத்த அணு, மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
- மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும்.
- மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.
- மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- ஒரு சராசரி பெண்ணின் உயரம், ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும்.
- காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும். ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும்.
- ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.
- மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தனாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது.
- ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல் ஐந்து மடங்கு தகவல்களை சேமித்து வைக்க முடியும்.
- மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு, மார்பில் மூடியுள்ள ஆண்களை விட “CIRRHOSIS” (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
- பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள கடினமான பொருளாகும்.
- கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.
- மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பாக்டீரியாக்கள் இருக்கும்.
Home »
அறிந்து கொள்வோம்
» மனித உடலமைப்பு-சுவாரஸ்யமான தகவல்கள்
மனித உடலமைப்பு-சுவாரஸ்யமான தகவல்கள்
Written By Unknown on Thursday, May 1, 2014 | 10:32 PM
Labels:
அறிந்து கொள்வோம்
Post a Comment