Home » » DNA எனப்படும் மரபணுவை செயற்கையாக உருவாக்கி, சர்வதேச விஞ்ஞானிகள் சாதனை - 7 ஆண்டுகால விடா முயற்சியில் வெற்றி

DNA எனப்படும் மரபணுவை செயற்கையாக உருவாக்கி, சர்வதேச விஞ்ஞானிகள் சாதனை - 7 ஆண்டுகால விடா முயற்சியில் வெற்றி

Written By Unknown on Friday, April 4, 2014 | 3:42 AM


DNA எனப்படும் மரபணுவை செயற்கையாக உருவாக்கி, சர்வதேச விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். 7 ஆண்டுகால விடா முயற்சியில் கிடைத்த இந்த வெற்றி, பல்வேறு துறைகளில் பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மனிதனின் உள்ளுறுப்புகளை செயற்கை முறையில் உருவாக்கி வரும் விஞ்ஞானிகள், செயற்கை ரத்தம் உள்ளிட்டவற்றையும் தயாரித்துள்ளனர். இந்நிலையில், DNA எனப்படும் மரபணுவை செயற்கை முறையில் தயாரித்து, சர்வதேச விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து, கடந்த 7 ஆண்டுகளாக நடத்திய பரிசோதனையில், ஈஸ்ட் எனப்படும் உயிரினத்தின் செல்களில் உள்ள குரோமோசோம்களை மாற்றியமைத்து, புதிய மரபணுவை உருவாக்கியுள்ளனர். இத்தகைய மரபணுக்கள் மனித இனத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட பல்வேறு இனங்களில் புதிய கண்டுபிடிப்புக்கு, பெரும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

Post a Comment