(சுவனப்பிரியன்)
அதென்னமோ தெரியலை! என்ன மாயமோ புரியலை! இந்த சினிமா நடிகர்களுக்கு இஸ்லாத்தின் மேல் நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழ் கதாநாயகன் ஜெய் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியை மாலை மலர் வெளியிட்டுள்ளது. அது சம்பந்தமாக விபரம் திரட்ட கூகுளில் தேடினால் இந்தி நடிகை மம்தா குல்கர்னி இஸ்லாத்தை ஏற்ற விபரமும் தெரிய வந்தது.
1997 ஆம் ஆண்டு விக்கி கோஸ்வாமி ஐக்கிய அரபு அமீரகத்தில் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தண்டனை காலம் 25 வருடங்கள். தனது தண்டனை காலங்களில் செய்த தவறுகளை எண்ணி வருந்தி சிறைச்சாலையில் இஸ்லாத்தை படிக்க ஆரம்பிக்கிறார். அங்கு அவருக்கு மாற்றங்கள் ஏற்படுகிறது. இஸ்லாத்தை தனது வாழ்வியலாக மாற்றிக் கொள்கிறார் கோஸ்வாமி.(பெயரைப் பார்த்தால் இவர் ஒரு பார்பனர் என்று தெரிகிறது)
நல்ல நடத்தைகளால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு 2012ல் விடுதலையடைந்து அதன் பிறகு கென்யாவின் நெய்ரோபியில் தங்குகிறார். அங்கு முன்பே பழக்கமான ஹிந்தி நடிகை மம்தா குல்கர்னியோடு மேலும் நெருக்கமடைகிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அவருக்கும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை கொடுக்கிறார் கோஸ்வாமி. பிறகென்ன.... வழக்கம் போல் மம்தா குல்கர்னியையும் இஸ்லாம் தனது அன்பு கரங்களால் அரவணைத்துக் கொள்கிறது. ஹிந்தி திரை உலகில் முன்பு செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தத்தை இஸ்லாத்தை தழுவியதன் மூலம் கழுவிக் கொண்டார். மே பத்து 2013ல் இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. 90 களில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர் மம்தா குல்கர்னி. 1991 லிருந்து 2002 வரை பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர். கலங்கிய அந்த நீரோடையானது இஸ்லாத்தை ஏற்றதனால் புனிதமடைந்துள்ளது. இனி இந்த ஓடையானது இஸ்லாமிய வழியில் பயணிக்கும். தம்பதிகள் இருவரும் தவறுகளிலிருந்து விலகி சிறந்த இஸ்லாமியர்களாக வாழ நாமும் வாழ்த்துவோம்.
http://thenewsfocus.blogspot.com/2013/05/former-bollywood-actress-mamta-kulkarni.html
அடுத்து தமிழ் சினிமா ஹீரோ ஜெய் இஸ்லாத்தை தழுவிய செய்தியையும் மாலை மலர் தருகிறது. அதையும் பார்ப்போம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகர் ஜெய், 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே முஸ்லீம் மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக மாறியுள்ளார். இதையடுத்தே இவர் முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது.
http://cinema.maalaimalar.com/2014/04/16170641/actor-jai-change-to-muslim-cas.html
Post a Comment