உக்ரைனை இனிமேலும் அச்சுறுத்த வேண்டாம், மீறினால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என புடினை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைனிலிருந்து பிரிந்து கடந்த மாதம் 18ம் திகதி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் மூலம், கிரிமீயா மாகாணம் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டது.
இந்நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர், சுமார் 10 நகரங்களில் உள்ள அரசு கட்டடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
இவர்கள் கட்டடங்களை விட்டு வெளியேற கோரி அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் டுர்ச்சினோவ் விதித்த கெடு, நேற்று முன்தினம் முடிவடைந்தபோதிலும், கட்டிடங்களை தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் ரஷ்யா ஜனாதிபதி புதினுடன் உறையாடியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒபாமா புதினிடன் பேசுகையில், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை விட்டு வெளியேறச் செய்யுங்கள் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து புதின் கூறுகையில், “ரஷ்யா மற்றும் ரஷ்ய மொழி பேசுகிற மக்களின் நலன்களை கருத்தில் கொள்வதற்கு உக்ரைன் தலைமை ஆர்வம் காட்டாததும், நடவடிக்கை எடுக்காததும்தான் கிழக்கு உக்ரைன் நெருக்கடிக்கு காரணம்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் லக்சம்பர்க் நகரில் கூடி, உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதிக்கையில், கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்ததாக தெரிகிறது.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், “ரஷ்யா மீதான தடையை மேலும் விஸ்தரிக்க நாங்கள் சம்மதம் தெரிவித்தோம்” என கூறியுள்ளார்.
Home »
சர்வதேச செய்திகள்
» உக்ரைனை அச்சுறுத்த வேண்டாம்! புதினை எச்சரிக்கும் ஒபாமா
உக்ரைனை அச்சுறுத்த வேண்டாம்! புதினை எச்சரிக்கும் ஒபாமா
Written By Unknown on Wednesday, April 16, 2014 | 9:55 AM
Labels:
சர்வதேச செய்திகள்
Post a Comment