Home » » மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி நாளை திறந்துவைப்பார்!

மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி நாளை திறந்துவைப்பார்!

Written By Unknown on Thursday, April 17, 2014 | 7:46 PM


மட்டக்களப்பு மாவட்டத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (19) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.இப்பாலம் 210 மீற்றர்கள் நீளத்தையும் 9.8 மீற்றர்கள் அகலத்தையும் கொண்டுள்ளது.அத்தோடு பாதசாரிகள் பயணிக்கக் கூடியவகையில் 488 மீற்றர்கள் நீளமும், 10 மீற்றர்கள் அகலமும் கொண்டதான சப்பாத்து பாலமும் இப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக் கான முகவரகத்தினதும் (ஜெய்க்கா) இலங்கை அரசாங்கத்தினதும் நிதியுதவியோடு இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் நிர்மாணப்பணிகள் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நிர்ணயிக்கப்பட்டிருந்த தினத்திற்கு முன்னர் நிர்மாண வேலை கள் பூர்த்தியடைந்துள்ளன.
Share this article :

Post a Comment