உள்நாட்டு யுத்தம் நடைபெறும் சிரியாவில், சமீபகாலமாக ராணுவத்தினரிடம் ஒரு எழுச்சி காணப்படுகிறது. ஆரம்பத்தில் ராணுவத்தினருக்கு அடி மேல் அடி கொடுத்து நகரங்களை கைப்பற்றிய போராளி அமைப்பினர், தற்போது ஒவ்வொரு நகரமாக இழந்து வருகின்றனர்.
அதுவும், அமெரிக்கா, அமெரிக்க நட்பு நாடுகள், மற்றும் சில அரபு நாடுகள் ஆயுதம் வழங்கியுள்ள நிலையிலும், தம்வசம் இருந்த நகரங்களை தக்க வைத்துக்கொள்ள தத்தளிக்க வேண்டிய நிலையில் போராளி அமைப்பினர் உள்ளனர்.
யுத்தம் தொடங்கிய நாட்களில், ராணுவத்தில் இருந்த தளபதிகள் சிலரேகூட, ராணுவம் தோற்கப் போகின்றது என கணித்து, நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். ஜனாதிபதி பஷார் அல்-அசாத், அதிகம் வெளியே தலை காட்டாமல் இருந்தார்.
இப்போது நிலைமை தலைகீழ்.
போராளி அமைப்பினரின் முக்கிய ஆதரவு நகரங்களில் ஒன்றான ஹொம்ஸ், ராணுவத்தின் கைகளில் வீழ்ந்துவிட்டது. அடுத்து, போராளிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அலீபோ நகரை நோக்கி ராணுவத்தின் பார்வை பதிந்துள்ளது. அலீபோவை நோக்கி ராணுவம் நகரத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் வெளியே வந்த ஜனாதிபதி அசாத், யுத்த முனைகளுக்கு நேரில் சென்று ராணுவ தளபதிகளை சந்திக்க தொடங்கியுள்ளார். (போட்டோக்கள் 1, 2) ராணுவமும், தாம் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளில் தம்மை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கீழேயுள்ள இணைப்பில் உள்ள போட்டோ தொகுப்பில், ராணுவத்தின் பக்கத்தை காட்டியிருக்கிறோம். இந்த போட்டோக்களில் ராணுவத்தினர் நடமாடும் பகுதிகள் எல்லாமே, சில தினங்களுக்கு முன்புவரை போராளிப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள்.
3-வது போட்டோவில், சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஹொம்ஸ் நகரின் கால்டியா பகுதியில் ராணுவ கவச வாகனம் வீதியில் வருவதை காணலாம். 4-வது போட்டோவில் ராணுவ வீரர்கள் பிக்கப் ட்ரக்கில் செல்வது, ஐன் அசான் கிராமத்தில்.
5-வது போட்டோவில் அலீபோ நகர் அருகேயுள்ள மெசலோன் பகுதியில் நின்றபடி போராளிப் படையினரை தாக்கும் காட்சி. 6-வது போட்டோவில் தால் எல்-தினே பகுதியில் தாக்குதல் முடிந்தபின், யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட செல் ரவுண்ட்ஸ்ஸூக்கு அருகே நிற்கும் ராணுவ வீரர்.
7-வது போட்டோவில், இருந்து 15-வது போட்டோவரை, அலீபோ நகரை கைப்பற்றுவதற்காக ராணுவத்தினர் தற்போது மேற்கொள்ளும் நகர்வுகளை பார்க்கலாம். இந்த போட்டோக்கள் அனைத்துமே, அலீபோ நகரைச் சுற்றியுள்ள வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டவை.
முன்பு ஹொம்ஸ் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவம் நகர்ந்து முற்றுகையிட்ட போதும், இதே போன்ற நகர்வையே மேற்கொண்டார்கள். இப்போது, அலீபோவை சுற்றி முற்றுகையிடுகிறார்கள். அலீபோ எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்கப் போகின்றதோ!
அலீபோ நகரம் ராணுவத்தின் கைகளில் விழுவதை அமெரிக்கா விரும்பாது. அதை தடுத்து நிறுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 7-வது போட்டோவில், இருந்து 15-வது போட்டோவரை உள்ள இடங்களில் சிரியா ராணுவத்தினரை நகர விடாமல் செய்தால்தான், அமெரிக்காவின் முயற்சி வெற்றியளிக்கும்!
என்ன செய்வார்கள்? கடைசி நேரத்தில் நேட்டோ விமானப் படையை வைத்து இந்தப் பகுதிகளில் குண்டு வீசுவார்களா?