Home » » அமெரிக்க ஊடகங்களை ஆட்டம் காணச் செய்யும் சிரிய இலத்திரனியல் படை!

அமெரிக்க ஊடகங்களை ஆட்டம் காணச் செய்யும் சிரிய இலத்திரனியல் படை!

Written By Unknown on Friday, August 16, 2013 | 5:56 PM


வொஷிங்டன் போஸ்ட், சி.என்.என். மற்றும் டைம் உட்பட அமெரிக்க ஊடகங்கள் ஹெக்கிங் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி ஹெக்கிங் நடவடிக்கையை சி.என்.என். செய்திச் சேவையும் உறுதி செய்துள்ளது.

'Syrian Electronic Army' எனப்படும் குழுவினராலேயே மேற்படி ஹெக்கிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.

தமது அரசிற்கு எதிராக செயற்படுவோர், செய்தி வெளியிடுவோரின் இணையக் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.



இதேவேளை சி.என்.என். நிறுவனத்தின் ஊழியர்களை இலக்கு வைத்து பிஸிங் முறையிலான தாக்குதல்களையும் 'Syrian Electronic Army' மேற்கொண்டிருந்தது.

இக்குழுவே AP (Associated Press) ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கை ஹெக் செய்து அதிலிருந்து வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டு வெடிப்புகள்: ஒபாமா காயம் என்ற செய்தியை வெளியிட்டு உலகம் பூராகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



ரோய்டர்ஸ், ஐ.டி.வி. நிவ்ஸ், பினான்சியல் டைம்ஸ் என பல ஊடகங்களின் இணையக்கட்டமைப்புகளின் மீது மேற்படி குழு கைவைத்துள்ளது இதனால் அமெரிக்க ஊடக நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
veerakesary
Share this article :

Post a Comment