Home » » எகிப்தின் ரபாவில் இராணுவ ஆட்சியாளர்கள் நிகழ்த்திய நர வேட்டை!! - 500 இற்கும் அதிகமானவர்கள் மரணம்!!

எகிப்தின் ரபாவில் இராணுவ ஆட்சியாளர்கள் நிகழ்த்திய நர வேட்டை!! - 500 இற்கும் அதிகமானவர்கள் மரணம்!!

Written By Unknown on Friday, August 16, 2013 | 2:30 AM


எகிப்திய இராணுவ அரசு “பொலிஸாரின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கை” என்ற பெயரில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களில் 500 இற்கும் அதிகமானவர்கள் Rab'ah Al Adawiyah-ல் தங்கள் சாத்வீக எதிர்ப்பை வெளியிட்டு வந்த இஹ்வானிய அரசின் ஆதரவாளர்கள் மீது வரையறையற்ற தாக்குதல்களை தொடராக எகிப்திய பொலீஸார் (?) மேற்கொண்டதில் இந்த அநியாய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த தகவலை இஹ்வான் ஒன்லைன் ikhwanonline தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. சுமார் 10,000 பொதுமக்கள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். இலட்சக்கணக்கானவர்கள் கூடியுள்ள ஜனசமுத்திரத்தின் மீது செறிவு மிக்க கண்ணீர் புகை குண்டுகளை ஆயிரத்திற்கும் அதிகமாக உபயோகித்ததில் விரண்டு தறிகெட்டு ஓடிய மக்கள் ஒருவர் மேல் ஒருவரை ஏறி மிதித்ததிலேயே அதிகபட்ச இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.













Share this article :

Post a Comment