தமிழகத்தில், தேர்தல் பிரசாரம் துவக்கத்தில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசின. பா.ஜ.,வை கண்டுகொள்ளவில்லை. ஆனால், சென்னையில், நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்ட, 13ம் தேதி, பெரும் திருப்பம் ஏற்பட்டது. அன்றைய தினம் கரூரில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, முதல் முறையாக, பா.ஜ.,வை விமர்சனம் செய்தார். பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளர்களை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும் என, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மோடி பேசும்போது, 'தமிழகத்தில் அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி, ஆட்சிக்கு வந்தும், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை' என, குற்றம் சாட்டினார். இதற்கு, கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த, அ.தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பதில் அளித்தார்.
குற்றச்சாட்டு:
கூட்டத்தில், அவர் பேசியதாவது: சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, அ.தி.மு.க.,வை, தி.மு.க., உடன் இணைத்து, 'இவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவும் இல்லை; அக்கறை செலுத்தவும் இல்லை' என, குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் சதா சர்வகாலமும், மக்களைப் பற்றி நினைக்கும், ஒரே மக்கள் இயக்கம், அ.தி.மு.க., தான். தமிழகத்தில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒரு அரசு, மக்கள் நலனில், அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க உதவுவது, பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில், குஜராத்தை விட, தமிழகம் தான் முன்னணியில் உள்ளது.
* மொத்த மக்கள் தொகையில், 16.6 சதவீத மக்கள், குஜராத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
* மொத்த மக்கள் தொகையில், 16.6 சதவீத மக்கள், குஜராத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
Post a Comment